கன்னி வாய்க்கால் இடத்தை பிளாட் போட பட்டா கொடுத்த அரசு அதிகாரிகள்
கன்னி வாய்க்கால் இடத்தை பிளாட் போட பட்டா கொடுத்த அரசு அதிகாரிகள் குறித்த அதிர்ச்சித் தகவல் ஆக்கிரமிப்பை அகற்ற முற்பட்டபோது தெரியவந்துள்ளது.
Update: 2023-12-08 13:21 GMT
மயிலாடுதுறையை அடுத்துள்ள பட்டமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட சீனிவாசபுரம் பகுதியில், கன்னி வாய்க்கால் 500 மீட்டர் தூரம் ஆக்கிரமிக்கப்பட்டதால், குடியிருப்பு பகுதிகளை தண்ணீர் சூழ்ந்தது. மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பார்வையிட்டு, உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார். 300 மீட்டர் தூரம் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட நிலையில், மீதமுள்ள பகுதியில், இருவர் வீட்டின் கொல்லைபுர சுவர் ஆக்ரமிப்பை ,அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். 40 ஆண்டுகளுக்கு முன்பு, பட்டா இடத்தைதான் வாங்கியதாகவும் , அதில் வீடு கட்டி உள்ளோம் என்றும், காழ்ப்புணர்ச்சியால் இந்த நடவடிக்கை என்று, ஆக்கிரமிப்பை அகற்றவந்த, ஜேசிபி எந்திரத்தைதடுத்து நிறுத்தினர், வருவாய் வட்டாட்சியர், மற்றும் போலீசார் , தலையிட்டு சமாதானம் செய்து ஆக்கிரமிப்பை அகற்றினர். வருவாய்துறையினரே 40 ஆண்டுகளுக்கு முன்பு, புறம்போக்கு இடத்தை பட்டாமாற்றி கொடுத்துவிட்டு ,தற்பொழுது எங்கள்மீது குறை சொல்கிறார்கள் என்று தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளதாக கூறினர்.