அடையாள அட்டைகள் குப்பையில் கிடந்ததால் பரபரப்பு !
சிங்கம்புணரியில் அடையாள அட்டைகள் குப்பையில் கிடந்ததால் பரபரப்பு - போலீசார் விசாரணை.;
By : King 24x7 Angel
Update: 2024-04-06 05:53 GMT
அடையாள அட்டை
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் காலி செய்யப்பட்ட நிலையில் அலுவலகம் பின்பகுதியில் இலவச சேலை, வாக்காளர் அடையாள அட்டை, முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டத்தின் அடையாள அட்டை, உழவர் பாதுகாப்பு திட்டம் உறுப்பினர் அடையாள அட்டை, விவசாயிகள் சமூக பாதுகாப்பு மற்றும் நலத்திட்டம் அடையாள அட்டை, சாதிச் சான்றிதழ் போன்ற பல்வேறு ஆவணங்களை தூக்கி வெளியில் வீசி சென்ற நிலையில் அதனை கண்ட பொதுமக்கள் உடனே சிங்கம்புணரி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து சென்ற போலீசார் ஆவணங்கள் புதிதாக உள்ளதா அல்லது பயன்பாட்டில் இல்லையா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.