கூலித்தொழிலாளி கிணற்றில் குதித்து தற்கொலை

சங்ககிரி அருகே கூலித்தொழிலாளி கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2023-10-30 07:46 GMT

தூக்கிட்டு தற்கொலை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த காவேரிப்பட்டி, வத்தங்காடு பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் ஈஷ்வரமூர்த்தி (வயது 33). இவர் பெயிண்ட் அடிக்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மது அருந்திவிட்டு இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது, போலீசாரின் சோதனையில், ஈஷ்வரமூர்த்தியின் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இன்று காலை தண்ணீர்தாசனூர் பகுதியில் அமைந்துள்ள மதுபான கடையில் மது அருந்தி விட்டு காவல் நிலையத்திற்கு செல்வதர்க்காக வீட்டில் பணம் கேட்டுள்ளார். அதற்கு வீட்டில் பணம் தர மறுத்ததால் மன உளைச்சலுக்கு ஆளான ஈஷ்வரமூர்த்தி, தனது வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் தகவல் கொடுத்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு தீயணைப்புத் துறையினரும், போலீசாரும் விரைந்தனர்.  இதையடுத்து, இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புத்துறையினர் ஈஷ்வரமூர்த்தியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.   இச்சம்பவம் தொடர்பாக தேவூர் போலீசார், வழக்கு பதிவு செய்து ஈஷ்வரமூர்த்தி குடும்ப பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சனையா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News