அம்மன் கழுத்தில் இருந்த தாலியை திருடியவர் கைது

சிவதாபுரத்தில் அம்மன் கழுத்தில் இருந்த தாலியை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-06-26 13:38 GMT

பைல் படம்

சேலம் கொண்டலாம்பட்டி அருகே சிவதாபுரம் பகுதியில் பச்சை பட்டாணி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூசாரியாக சேகர் (வயது60) என்பவர் இருந்து வருகிறார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு சேகர் கோவில் அருகே இருந்த பூச்செடியில் பூக்கள் பறிப்பதற்காக சென்று விட்டு மீண்டும் கோவிலுக்கு வந்தார்.

அப்போது அம்மன் கழுத்தில் இருந்த ¼ பவுன் தங்கம் தாலி திருட்டு போனது. இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீசில் பூசாரி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது அரியாக்கவுண்டம்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அழகேசு (45) என்பவர் அம்மன் கழுத்தில் இருந்த தாலியை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து அம்மன் தாலியை மீட்டனர்.

Tags:    

Similar News