வீடு புகுந்து பெண்ணை கத்தியால் குத்திய ரவுடி கைது

தன்னுடன் வர மறுத்ததால் பெண்ணை ரவுடி கத்தியால் குத்திய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Update: 2023-12-24 06:38 GMT

வீடு புகுந்து பெண்ணை கத்தியால் குத்திய ரவுடி கைது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பள்ளி விளை  பகுதியை சேர்ந்தவர்  லைசா (50). இவரது மகள் சுபி (27) .  சம்பவத்தன்று தாயும் மகளும்  வீட்டில் இருந்த நேரம்  மருங்கூர் பகுதி அகிலாஸ் (41) என்பவர் லைசாவை தன்னுடன் வருமாறு  அழைத்துள்ளார். லைசாவை அனுப்பி வைக்க முடியாது என்று மகள் சுபி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த  அகிலாஸ் கத்தியால் சுபியை  குத்தியுள்ளார். அப்போது சுபி விலகிக் கொள்ளவே, குத்து  லைசாவுக்கு விழுந்தது.  அகிலாஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். படுகாயம் அடைந்த லைசாவை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம்  அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து அகிலாசை கைது செய்தனர். இவர் ஏற்கனவே  போலீஸ் நிலையத்தில் ரவுடிகள் பட்டியலில்  இடம் பெற்றவர் என்பது  குறிப்பிட்டதக்கதாகும்.
Tags:    

Similar News