பெண்ணிடம் செயின் பறித்தவர் கைது!
பெண்ணிடம் செயின் பறித்த நபரை போலிசார் கைது செய்தனர்.
Update: 2024-04-05 04:34 GMT
திருமயம் ஆலங்குடி தாலுகா தாஞ்சூர் கோவில் வாசல் கிராமத்தை சேர்ந்தவர் ராமு. இவரது மனைவி பவானி(25). நேற்று காலை அரிமளம் சென்று விட்டு மொபட்டில் ஊர் திரும்பினார். மனப்பட்டி மனக்கண்மாய் அருகே வந்தபோது, எதிரே பைக்கில் வந்த வாலிபர் வேகமாக மொபட் மீது மோதினார். இதில் பவானி நிலை தடுமாறி கீழே விழுந்ததும், அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் செயினை பறித்துக்கொண்டு தப்ப முயன்றார். பவானி கூச்சலிடவே, கிராமமக்கள் திரண்டு வந்து வாலிபரை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அந்த வாலிபர் கே.புதுப்பட்டி அருகே உள்ள காயாம்பட்டியை சேர்ந்த ராஜா(24) என்பது தெரியவந்தது.ராஜாவை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.