போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

சங்கரன் கோவில் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-06-16 02:18 GMT

சங்கரன் கோவில் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.


தென்காசி மாவட்டம். சங்கரன்கோவில் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட் பட்ட ரயில்வே கேட் அருகே பயிற்சி சார்பு ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான காவல்துறையினர் நேற்று மாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் வந்தனர். அந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது மதுபோதையில் இருந்த மூவரும் காவல்துறை யினரிடம் தங்களை எப்படி நிறுத்தி சோதனை செய்யலாம் என்று பிரச்சனை செய்து அவர்களை அசிங்கமாக பேசி எங்களை சோதனை செய்தால் பைக்கால் ஏற்றி கொலை செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.

இது குறித்து பயிற்சி சார்பு ஆய்வாளர் பாலமுருகன் கொடுத்த புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் மாரியப்பன் விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் காவல் துறையினரிடம் தகராறு செய்து அவர்களுக்கு மிரட்டல் விடுத்தது சிவகிரி துரைசாமி யாபுரம் பகுதியைச் சேர்ந்த அமல்ராஜ் என்பவரின் மகன் அந்தோணி(26), கனகராஜ் என்பவரின் மகன் கண்ணன் மற்றும் ஜெயா என்பவரின் மகன் கண்ணன் ஆகியோர் என தெரிய வந்தது. இது குறித்து சார்பு ஆய்வாளர் மாரியப்பன் வழக்கு பதிவு செய்து அந்தோணியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தார். மேலும் தலைமறைவாக உள்ள இருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News