மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மண்டல பேரவை கூட்டம்
குள்ளஞ்சாவடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மண்டல பேரவை கூட்டம் நடைபெற்றது.
குறிஞ்சிப்பாடி ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குள்ளஞ்சாவடி ஆலப்பாக்கம் மண்டல பேரவை கூட்டம் ஒன்றிய குழு உறுப்பினர் V. கிருஷ்ணமூர்த்தி தலைமையில் VTC திருமண மண்டபத்தில் குள்ளஞ்சாவடியில் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் T. ஆறுமுகம் அவர்கள் கலந்து கொண்டு மாவட்ட குழு முடிவுகளை விளக்கி பேசினர். ஒன்றிய செயலாளர் MP. தண்டபாணி, ஒன்றிய குழு உறுப்பினர் S. கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கூட்டத்தில் குள்ளஞ்சாவடி பகுதியை பேரூராட்சியாக உயர்த்த வேண்டும், குள்ளஞ்சாவடியில் இயங்கி வரும் ரயில்வே ஸ்டேஷன் இயக்க வேண்டும் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், தேசிய ஊரக 100 நாள் வேலைத் திட்டத்தில் ஆண்டுக்கு 150 நாட்கள் வேலை வழங்கி சட்ட கூலி வழங்கிட வேண்டும் ஜாப் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும்.
குள்ளஞ்சாவடி பைபாஸ் பஸ் ஸ்டாப்பில் பொது கழிப்பிட வசதி ஏற்படுத்தி தர வேண்டும், குள்ளஞ்சாவடி கடைவீதியில் இயங்கி வரும் டாஸ்மார்க் கடையை இடம் மாற்ற வேண்டும் இன்னும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி 2024 ஜூலை 20 தாம் தேதிக்குள் குள்ளஞ்சாவடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.