கட்டுப்பாட்டை இழந்த மினி பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

திருச்சி மாவட்டம், வாலிஸ்புரத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற மினி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.;

Update: 2024-06-29 02:58 GMT
கட்டுப்பாட்டை இழந்த மினி பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து

  • whatsapp icon

திருச்சி மாவட்டம், துறையூர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து நேற்று காலை 11 மணியளவில் மினி பேருந்து ஒன்று சுமார் 30 பயணிகளை ஏற்றிக் கொண்டு காவேரிப்பட்டி கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தது.மினி பேருந்தை நாகம நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த மணி என்பவர் ஓட்டி வந்துள்ளார். மினி பேருந்து வாலிஸ்புரம் அருகே சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணிகள் பலர் படுகாயமடைந்தனர்.

இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் படுகாயமடைந்த பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த துறையூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டதில் மினி பேருந்து ஓட்டுநர் மணி செல்போன் பேசியபடி பேருந்தை இயக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.இச்சம்பவம் குறித்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News