சாலை பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்த அமைச்சர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ 51.25 கோடியிலான பல்வேறு சாலைப்பணிகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

Update: 2024-03-17 07:56 GMT
சாலை பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா

புதுக்கோட்டை அருகேயுள்ள கேப்பரை பகுதியில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 38 கோடியில் புதுக்கோட்டை- அறந்தாங்கி சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றும் திட்டம், திருவரங்குளத்தில் ரூ.4.48 கோடி மற்றும் வடகா A பகுதியில் ரூ. 7.77 கோடியில் புதுக்கோட்டை-ஆவணம் சாலையில் உள்ள வளைவுகளை அகலப்படுத்துதல், சாலை சந்திப்புகளை விரிவாக்கம் செய்யும் பணி உள்ளிட்ட ரூ.51.21 கோடியிலான சாலைப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, கொத்தமங்கலம் ஊராட்சியில் ரூ.13.50 லட்சத்தி ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணியை அமைச்சர் தொடங்கி வைத்தார். நிகழ்வுகளில் திருவரங்குளம் ஒன்றியக் குழுத தலைவர் வள்ளியம்மை தங்கமணி, நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர்" வேல்ராஜ், உதவிக் கோட்டப் பொறியாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News