சைவ பிள்ளைமார் சங்க நிர்வாகிகளை சந்தித்த அமைச்சர்
சைவ பிள்ளைமார் சங்க நிர்வாகிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு சந்தித்து பேசினார்.
Update: 2024-04-09 01:27 GMT
திருநெல்வேலியில் மக்களவை பொதுத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு நேற்று (ஏப்.8) இரவு திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு சைவ பிள்ளைமார் சங்க நிர்வாகிகளை சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்து கை சின்னத்திற்கு ஆதரவு கோரினார். இதில் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப், மாநகராட்சி மேயர் சரவணன் உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.