பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்ட அமைச்சர்!
தமிழக சுற்றுச்சூழல் பாதுகாப்புத்துறை அமைச்சர் மெய்யநாதன் நேற்று இருதயபுரம் கிறிஸ்துராஜா உயர்நிலைப்பள்ளியில் மரக்கன்றுகளை நட்டார்.;
By : King 24x7 Angel
Update: 2024-07-12 10:47 GMT
மரக்கன்று
தமிழக சுற்றுச்சூழல் பாதுகாப்புத்துறை அமைச்சர் மெய்யநாதன் நேற்று இருதயபுரம் கிறிஸ்துராஜா உயர்நிலைப்பள்ளிக்கு வந்தார். பள்ளி வளாகத்தை சுற்றிப்பார்த்தார். அங்கு நிறைய மரங்கள் இருந்ததை பார்த்து பள்ளி நிர்வாகிகளை பாராட்டினார். பின்னர் பள்ளி காலியிடங்களில் அமைச்சர் மரக்கன்றுகளை நட்டார். முன்னதாக அமைச்சரை முன்னாள் ஒன்றிய செயலர் சரவணன்,ஒன்றிய கவுன்சிலர் சரண்யா,தலைமையாசிரியர் கிளிண்டன் ஆகியோர் வரவேற்றனர்.