கலைஞர் மக்கள் சேவை மைய முகாமில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு அமைச்சர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
காங்கேயம் ஊராட்சி ஒன்றியம் சிவன்மலையில் உள்ள தனியார் மஹாலில் கலைஞர் மக்கள் சேவை மைய முகாமில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் வெள்ளகோவில் மு. பெ.சாமிநாதன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.;
Update: 2024-02-17 11:54 GMT
அமைச்சர் மு. பெ.சாமிநாதன்
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ஊராட்சி ஒன்றியம் சிவன்மலை ஊராட்சி பெருமாள் மலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் படியூர், சிவன்மலை, கணபதிபாளையம், தம்மரெட்டிபாளையம் மற்றும் பாலசமுத்திரம்புதூர் ஆகிய ஊராட்சிக்கு உட்பட்ட கலைஞர் மக்கள் சேவை மைய முகாமில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் வெள்ளகோவில் மு.பெ.சாமிநாதன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ்,ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமது திட்ட இயக்குனர் மலர்விழி, தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்அரசன்,திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவர் இல.பத்மநாபன் ஆகியோர் உள்ளனர்.