பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த அமைச்சர்
காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த அமைச்சர். அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;
By : King 24x7 Angel
Update: 2024-01-29 06:39 GMT
பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த அமைச்சர்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் இன்று 34வது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதில், தமிழக ஆளுநர் ஆர்.என்., ரவி, உயர்கல்வித்துறை அமைச்சர் இராஜ கண்ணப்பன் உட்பட பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற நிலையில் உயர் கல்வித்துறை அமைச்சர் இராஜ கண்ணப்பன் பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த சம்பவம் அனைவரது மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது