உத்திரமேரூரில் 2249 நபர்களுக்கு பட்டா வழங்கிய அமைச்சர்!

உத்திரமேரூரில் நடைபெற்ற மாபெரும் பட்டா வழங்கும் விழாவில் 2249 நபர்களுக்கு பட்டாக்களை தமிழக அமைச்சர் அன்பரசன் வழங்கினார்.

Update: 2024-02-07 11:08 GMT

உத்திரமேரூரில் கலைஞர் நூற்றாண்டு விழாவினையெட்டி நடைபெற்ற மாபெரும் பட்டா வழங்கும் விழாவில் 2249 நபர்களுக்கு பட்டாக்களை தமிழக அமைச்சர் அன்பரசன் வழங்கி வாழ்த்துரை வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, உத்திரமேரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாபெரும் பட்டா வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்து சிறப்புரை ஆற்றினர். விழாவில் ஒருமுறை வரம் செய்யும் திட்டத்தின் கீழ் ஏற்கனவே வழங்கப்பட்டால் பட்டாக்களை கணினி வழிபட்டாவாக மாற்றம் செய்த வழியில் 1793 நபர்களுக்கும் , ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியில் நலத்துறை சார்பில் நிலை எடுப்பு செய்யப்பட்ட காலி மனை பட்டார் 68 நபர்களுக்கும் , புறம்போக்கு நிலங்களில் ஆக்கிரமிப்பு செய்து குடி இருந்து வரும் வீட்டுமனை ஏற்ற தகுதியான பயணிகளுக்கு நிலையாணை 21ன் கீழ் 388 நபர்கள் என மொத்தம் ரூபாய் 18 கோடியே 91 லட்சத்து 76 ஆயிரத்து 382 ரூபாய் மதிப்பிலான 2249 நபர்களுக்கு பட்டவர்களை வழங்கி விழா பேருரை ஆற்றிய தமிழக சிறு, குறு மற்றும் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், கடந்த 10 ஆண்டுகளில் பட்டாக்கள் வழங்கப்பட்ட போதிலும் அதனை முறையாக அரசு ஆவணங்களில் பதிவேற்றி இப்போது முழுமை பெற்ற பட்டாவாக வழங்கப்பட்ட அதற்கான முழு உரிமையும் உங்களுக்கு கிடைத்துள்ளதாகவும் , இதை எப்போது வேண்டுமானாலும் இ சேவை மையங்கள் மூலம் பட்டா நகலை எடுத்துக் கொள்ளலாம் என தெரிவித்தார்.

மேலும் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் கால்நடை மருந்தகம், அங்கன்வாடி மையம், வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு ஆகியவை ரூபாய் 1.96 கோடி மதிப்பு கட்டப்பட்ட கட்டிடங்களையும் திறந்து வைத்தார். இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயக்குமார், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள், ஒன்றிய குழு தலைவர் உள்ளிட்ட பல்வேறு உள்ளாட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News