தந்தை உயிரிழந்த நிலையிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்
தந்தை உயிரிழந்த நிலையிலும் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் பசுவபட்டி அருகே கலைஞர் மக்கள் சேவை முகாம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 646 பயணிகள் பயனாளிகளுக்கு 16 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் 1.07 கோடி மதிப்பீட்டிளான பல்வேறு முடிவுற்ற பணிகளை அமைச்சர் மு.பெ சாமிநாதன் வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தநிலையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன் அவர்களின் தந்தை முத்தூர் சா. பெருமாள் சாமி கவுண்டர் உடல் நலக்குறைவின் காரணமாக இன்று உயிரிழந்தார்.இதனையடுத்து இன்று நடைபெறவிருந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கலந்து கொள்ள மாட்டார் என எண்ணிய நிலையில் திட்டமிட்டபடி அரசு நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன் அவர்கள் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் மற்றும் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார்.
தந்தை இறந்த நிலையிலும் கூட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் பணியை செய்த அமைச்சரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.