கலையரங்கம் கட்டிடம் கட்டும் பணியை ஆய்வு செய்த எம்எல்ஏ
பிரம்ம தேசம் மேல்நிலைப் பள்ளியில் ரூ.7லட்சம் மதிப்பீட்டில் புதிய கலையரங்கம் கட்டிடம் கட்டும் பணியை எம்எல்ஏ ஆய்வு செய்தார்.
வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் பிரம்மதேசம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் 2023_2024 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டில் புதிய கலையரங்கம் கட்டிடம் கட்டும் பணியினை செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு கட்டிடம் கட்டும் பணியை விரைந்து முடிக்க ஆலோசனை வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் வெம்பாக்கம் ஒன்றிய குழு பெருந்தலைவர் மாமண்டூர் D.ராஜூ வெம்பாக்கம் மத்திய ஒன்றிய கழக செயலாளர் அண்ணன் J C K.சீனிவாசன் வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் N.சங்கர் வெம்பாக்கம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் M.தினகரன் ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சாந்தமூர்த்தி மற்றும்,அரசு அலுவலர்கள் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.