குமாரபாளையத்தில் வாட்டர் டேங்க்கு பந்தல் அமைத்த நகராட்சி நிர்வாகம்

குமாரபாளையத்தில் வாட்டர் டேங்க்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் பந்தல் அமைக்கப்பட்டது.

Update: 2024-05-05 12:17 GMT

வாட்டர் டேங்க் அமைத்த நகராட்சி நிர்வாகம் 

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் இடைப்பாடி சாலையில் அமைந்துள்ளது. இதனை புதுப்பிக்கும் கட்டுமான பணி நடந்து வருவதால், தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு, அம்மா உணவகம் பகுதியில் பஸ் ஸ்டாண்ட் செயல்பட்டு வருகிறது.

கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியர், தனியார் நிறுவன பணியாளர்கள், இங்குள்ள நகாட்சி கடை வியாபாரிகள், டாக்ஸி, ஆட்டோ ஓட்டுனர்கள் என நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான நபர்கள் இங்கு வந்து செல்கின்றனர். கடும் கோடை வெப்பம் சுட்டெரித்து வரும் நிலையில், தற்காலிக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு, குடிநீர் நிரப்பப்பட்டு வருகிறது. வெப்பத்தின் தாக்குதலால் இந்த குடிநீர் அடிக்கடி தீருவதால், நகராட்சி பணியாளர்கள் உடனுக்குடன் குடிநீர் தொட்டியில் குடிநீர் நிரப்பி வருகிறார்கள். ஆயினும் இது பிளாஸ்டிக் டேங்க் என்பதால், கோடை வெப்பத்தின் காரணமாக டேங்க் குடிநீர் சுடுநீராக மாறி விடுகிறது. இதனால் தாகத்திற்கு தண்ணீர் பருகும் பொதுமக்கள், தண்ணீர் இருந்தும் குடிக்க முடியாத நிலையில் உள்ளதே என, கடும் அதிருப்திக்கு ஆளாகி வந்தனர்.

இதனால் நகராட்சி நிர்வாகம் சார்பில் இந்த வாட்டர் டேங்க் மேல் பகுதி மற்றும் சுற்றியிலும் தென்னங்கீற்று பந்தல் அமைக்கப்பட்டது. தற்போது இந்த டேங்க் தண்ணீர் குளிர்ந்த நிலையில் உள்ளதால், பொதுமக்கள் ஆர்வத்துடன் இங்கு வந்து குடிநீர் பருகி செல்கின்றனர்.

Tags:    

Similar News