நோய் வாய் பட்ட முதியவர் - மருத்துவமனையில் அனுமதித்த நகராட்சி ஆணையர்.
குழித்துறை அருகே நோய் வாய்ப்பட்டு துர்நாற்றத்துடன் வீட்டில் கிடந்த முதியவரை மருத்துவமனையில் அனுமதிக்க நகராட்சி ஆணையர் ராமத்திலகம் நடவடிக்கை மேற்கொண்டார்.;
Update: 2024-05-15 07:26 GMT
மருத்துவமனை அழைத்து செல்லப்படும் முதியவர்
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பழவார் பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் பராமரிப்பு இல்லாமல் நோய் வாய்ப்பட்டு வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசிய நிலையில் உள்ளதாக அப்பகுதி மக்கள் குழித்துறை நகராட்சி அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.இதைத் தொடர்ந்து குழித்துறை நகராட்சி ஆணையாளர் ராமத்திலகம் உத்தரவுபடி சுகாதார ஆய்வாளர் ராஜேஷ் மற்றும் சமூக சேவகர் ராஜகோபால் ஆகியோர் அப்பகுதிக்கு சென்றனர்.அங்கு ராமதாஸ் என்பவர் வாய்ப்பட்டு நோய் படுத்த படுக்கையாக இருப்பது தெரியவந்தது. உடனே அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குழித்துறை அரசு ஆஸ்பத்திரி கொண்டு சென்றனர். டாக்டர்கள் அவரை உள்நோயாளியாக அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.