நெல்லை மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்திருந்த மாயமான தலைவர்
நெல்லை மாவட்ட எஸ்பியிடம் மாயமான தலைவர் காங்கிரஸ் நான்கு நாட்களுக்கு முன்பு புகார் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
By : King 24X7 News (B)
Update: 2024-05-04 08:42 GMT
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மாயமான சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் ஜெயக்குமார் கடந்த 4 நாட்களுக்கு முன்பு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசனிடம் தங்களது வீட்டை சில மர்ம நபர்கள் கண்காணித்து வருவதாகவும், அவர்களால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் புகார் அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.