கத்தியை காட்டி பெண்ணிடம் 7.5 சவரன் தாலிகொடி பறித்த வழக்கில் வாலிபர் கைது

சாப்ட்வேர் இன்ஜினியர் மனைவியிடம் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் கத்தியைக் காட்டி மிரட்டி 7.5 சவரன் தாலிகொடியை பறித்து கொண்டு தப்பி ஓடிய வழக்கில் குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்

Update: 2025-01-14 02:22 GMT
தாராபுரம் காலேஸ் ரோடு ஆர்.கே. பி நகர் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் இவர் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிருந்தா தேவி வயது 33. கடந்த வாரத்தில் வீட்டிற்கு வெளியே பிருந்தா தேவி நின்று கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் முகவரி கேட்பது போல் பிருந்தா தேவியிடம் கேட்டுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது மர்ம நபர் கத்தியை காட்டி மிரட்டி பிருந்தா தேவி அணிந்திருந்த அணிந்திருந்த 7.5 பவுன் தாலிகொடியை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றார். இதை அடுத்து பிருந்தா தேவி சத்தம் போடவே அருகில் உள்ளவர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்ற இளைஞரை துரத்தினர். ஆனால் மர்ம ஆசாமி கண் இமைக்கும் நேரத்தில் தப்பிச் சென்றார்.  இது குறித்து தாராபுரம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பிருந்தா தேவி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர். இந்த வழக்கில் அங்கு உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போலீசார் குற்றவாளியை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்த நிலையில் ஒட்டன்சத்திரம் பைபாஸ் சாலையில் உள்ள இராகாம்பட்டி சோதனைச் சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையின் போது அவர் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன் சதீஷ் கண்ணன் வயது 34 என்பதும் தெரிய வந்தது. இவர் தாராபுரம் பகுதியில்சாப்ட்வேர் இன்ஜினியர் மனைவியிடம் கத்தியை காட்டி மிரட்டி 7.5 பவுன் தங்க நகை பறித்துச் சென்றதை ஒப்புக்கொண்டார். இவரை போலீசார் கைது செய்து தாராபுரம் நீதிமன்ற காவலுக்கு அழைத்துச் சென்று சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து 7.5 பவுன் தங்க நகை பறிமுதல் செய்தனர்.

Similar News