தங்கம் கம்மல் என்று எண்ணி சிறுமியை கடத்தி சென்ற மர்ம நபர்
தங்கம் கம்மல் என்று எண்ணி சிறுமி அணிந்திருந்த பித்தளை கம்மல்களை எடுத்து சென்ற நபர். காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
By : King 24x7 Angel
Update: 2024-02-06 06:31 GMT
ஈரோடு கருங்கல்பாளையம் வீர வீதியை சேர்ந்த இறைச்சி கடை ஊழியர் செல்வராஜ் .இவரது 7 வயது மகள் அரசு உதவி பெறும் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்த நிலையில் தனது சகோதரருடன் பள்ளி முடிந்து வீட்டிற்கு கண்ணையன் வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அறிமுகம் இல்லாத நபர் தந்தை செல்வராஜ் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறி 7 வயது சிறுமியை இருசக்கர வாகனத்தில் ஏற்றுக்கொண்டு சகோதர்ரை வீட்டிற்கு சென்று துணிகளை எடுத்து வர சொல்லியுள்ளான். பின்னர் சிறுமி கனிஷ்காவை ஈரோடு - நாமக்கல் மாவட்ட எல்லையான காவிரி ஆற்று பாலத்தில் வைத்து சிறுமி அணிந்திருந்த பித்தளை கம்மல்களை தங்கம் என நினைத்து கம்மல்களை எடுத்துக்கொண்டு செல்வராஜ் வேலை செய்யும் இறைச்சி கடைக்கு அருகில் இறக்கி விட்டு சென்றுள்ளான். இதுகுறித்து சிறுமி கனிஷ்கா தந்தை செல்வராஜிடம் தெரிவித்ததை அடுத்து கருங்கல்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு தற்போது காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.