கன்று குட்டியை துரத்திய மர்ம விலங்கால் பரபரப்பு
ஆம்பூர் அருகே விவசாய நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்த கன்று குட்டியை துரத்திய மர்ம விலங்கால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கீழ் ஈச்சம்பட்டு பகுதியை சேர்ந்தவர் சந்தானபாரதி இவருக்கு கிரீன் குட்டை பகுதியில் உள்ள நிலத்தில் இவரது மகன் அசோகன் , முனியாண்டி மனைவி பரமேஸ்வரி, ராஜமாணிக்கம் மகன் சக்தி ஆகியோர் தங்களது மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது திடீரென விவசாய நிலத்திற்குள் புகுந்த மர்ம விலங்கு ஒன்று கன்று குட்டியை துரத்தியதால் அச்சமடைந்து கூச்சலிட்டு விரட்டியுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த உமராபாத் போலீசார் அப்பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டு சிறுத்தை நடமாட்டம் இருக்குமா என்பதால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனர். மேலும் வாணியம்பாடி வனச்சரகர் குமார் தலைமையிலான வனத்துறையினர் அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இல்லை எனக் கூறி இருப்பினும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் இருப்பதாக பொது மக்களிடம் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கடந்த மாதம் திருப்பத்தூர் நகரப் பகுதியில் நுழைந்த சிறுத்தை ஒன்று நீண்ட போராட்டத்திற்கு பின் பிடிக்கப்பட்டு அதனை அருகில் உள்ள காப்பு காட்டில் விட்டதால் மீண்டும் காப்பு காட்டில் இருந்து குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை வந்திருக்குமா என்ற கோணத்தில் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்...