தி நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளி மாணவ, மாணவியர் சாதனை!

சர்வதேச அளவிலான “Spell Bee” போட்டியில் நாமக்கல் தி நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளி மாணவ, மாணவியர் சாதனை;

Update: 2024-03-06 11:37 GMT
தி நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளி மாணவ, மாணவியர் சாதனை!

தி நவோதயா அகாடமி மாணவ, மாணவியர் சாதனை

  • whatsapp icon

மாணவர்கள் வார்த்தைகளைப் எழுத்துப் பிழையின்றி எழுதும் திறமையை அளவிடும் “Spell Bee” எனும் போட்டித்தேர்வு மூன்று கட்டங்களாக நடைபெற்றது. முதல் சுற்றில் நவோதயா பள்ளி சார்பாக 57 மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர். அதில் 13 மாணவரூபவ்மாணவியர்கள் மாநில அளவில் தகுதி பெற்றனர். மேலும்; அதில் 9 மாணவ, மாணவியர்கள் தேசிய அளவில் தகுதி பெற்றனர். இதில் செல்வி.மிர்துளா ஸ்ரீ - 5ம் வகுப்பு தங்கப்பதக்கம் வென்றார். மேலும் தமிழ் இனியா 1 –ம் வகுப்பு, மிதுன் கார்த்திக் 5ம் வகுப்பு ஆகியோர் சிறப்பு முதல் தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். தேர்வில் கலந்து கொண்டவர்களுக்கும், வெற்றி பெற்றவர்களுக்கும் பள்ளி நிர்வாகத்தினர், முதல்வர், இருபால் ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் சகமாணவ, மாணவியர்கள் அனைவரும் வாழ்த்துகளைக் கூறி பாராட்டினார்கள்.  

Tags:    

Similar News