மழலைகளுக்கு உணவு பரிமாறி மகிழ்ந்த நீலகிரி ஆட்சியர்.
Update: 2023-11-02 02:58 GMT
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா மாவட்டத்தில் பல பகுதிகளில் நேரடி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக பழங்குடியினர் கிராமங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் முதியோர் இல்லங்கள் என பல பகுதிகளில் உள்ள இடங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வுகள் மேற்கொண்டு வரும் நிலையில் நேற்று உதகை நகரில் உள்ள அங்கன்வாடி மையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவர்கள் அமர்ந்து உணவு சாப்பிடும் போது உடனே சமையல் அறையில் இருந்து உணவு கொண்டு வரும்படி கூறிய மாவட்ட ஆட்சியர் குழந்தைகளுக்கு சத்தான உணவுகளை பரிமாறினார். மேலும் குழந்தைகளுடன் அவர்கள் பற்றி விவரங்களை கேட்டறிந்து உரையாடி மகிழ்ந்தார்.