விறகு சேகரிக்க சென்ற மூதாட்டி மாயம்
கம்பத்தில் விறகு சேகரிக்க சென்ற மூதாட்டி மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
Update: 2023-12-24 02:42 GMT
காவல் நிலையம்
கம்பத்தைச் சேர்ந்தவர் அமராவதி 68 ., வீட்டிற்கு தேவையான விறகுகளை வெளியில் சென்று சேகரித்து வருவது வழக்கம். கடந்த 18ஆம் தேதி விறகு பொறுக்க வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது மகன் மணிகண்டன் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் கம்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.