தீக்குளிக்க முயன்ற பஞ்சாயத்து தலைவரால் பரபரப்பு

வேடியூரில் புதிய டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாயத்து தலைவர், தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-02-19 09:21 GMT

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள ஒசஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட வேடியூர் கிராமத்தில் புதிய டாஸ்மாக் மதுபான கடை துவங்க உள்ளதை எதிர்த்து ஒசஅள்ளி ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த வேடியூர் கிராமத்தில் ஏற்கனவே ஒரு மதுபான கடை இயங்கி வருவதால் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வருகிறது. பெண்கள் கல்லூரி மாணவ மாணவிகள் விவசாயிகள் என பலதரப்பட்ட மக்கள் இந்த மதுபான கடையால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அதே சமயத்தில் அதே பகுதியில் மீண்டும் புதிதாக ஒரு அரசு மதுபான கடை துவங்க மூலப்பொருட்கள் அந்த கிராமத்தில் வர துவங்கியுள்ளதால் பல முறை ஆட்சியர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காத காரணத்தில் இன்று புதிய மதுபான கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து ஊார்சிமன்ற ஐலைவர் ஆறுமுகம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்தார்.

இதனால் உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவலர்கள் அவரை தடுத்து அவர்மீது தீயணைப்பு படை வீரர்கள் தண்ணீர் ஊற்றினர்.பின்னர் ஊாராட்சி தலைவர் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.இதனால் சிறிது நேரம் ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News