நூறாண்டு கோரிக்கைக்கு பலன், திருபுவனம் பகுதி மக்களுக்கு பட்டா
திருபுவனம் பகுதி மக்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளதால் மகிழ்ச்சி அடைந்து நன்றி தெரிவித்தனர்.
By : King 24x7 Angel
Update: 2024-02-10 10:35 GMT
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம் திருபுவனத்தில் மக்களின் 100 ஆண்டு கனவு நிறைவேற்றப்பட்டது. மக்களுடன் முதல்வர் முகாம் மூலம் விண்ணப்பித்து பட்டா பெற்ற பயனாளிகள் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர். தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம் திருபுவனத்தில் 100 ஆண்டுகளாக பட்டா இல்லாமல் வசித்த பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு நீண்ட காலமாக முயற்சித்த திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினர், அரசு தலைமைக் கொறடா கோவி செழியன், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம் ஆகியோரின் கோரிக்கையின்பேரிலும் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் பரிந்துரையின்பேரிலும் திருவிடைமருதூர் வட்டம் திருபுவனம் கிராமம் புல எண் 520/1 பரப்பு 6.38.0 ஹெக்டேர் அரசு புறம்போக்கு நிலுவை இனம் என்ற வகைப்பாடுள்ள நிலத்தை அரசாணை எண்435 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை நி.தி. ss 11 (1) நாள் 16.08.2023 இன் படி வகை மாற்றம் செய்யப்பட்டது. இதன்பேரில் திருபுவனம் பொதுமக்களின் வசிப்பிடங்களுக்கு பட்ட வழங்கிட ஏற்ற வகையில் வகை மாற்றம் செய்யப்பட்டது. திருபுவனம் கிராம பொதுமக்களின் கனவு நிறைவேறும் வகையில் 21.12.2023 அன்று திருபுவனத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் பட்டா வழங்கக்கோரி மனுக்கள் அளித்தனர். பட்டா வழங்கிட கோரிய பொதுமக்களின் கோரிக்கையின்படி, தஞ்சையில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவில் வருவாய்த் துறை அமைச்சர் கே.எஸ்.ராமச்சந்திரன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அவர்களால் 20 பயனாளிகளுக்கு பட்ட வழங்கப்பட்டது. மீதமுள்ள 239 பயனாளிகளுக்கு பிப்ரவரி மாதத்திற்குள் பட்டா வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருபுவனத்தைச் சேர்ந்த அலாவுதீன், வரலட்சுமி பி.அழகிரிசாமி ஆகியோர் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டா இல்லாமல் இருந்த எங்கள் குடும்பத்திற்கு பட்டா வழங்கிய முதலமைச்சர் அவர்களுக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றி எனத் தெரிவித்தனர்.