ஊரணிக்குள் தவறி விழுந்தவர் உயிரிழப்பு

விருதுநகர் அருகே முதலிப்பட்டியில் ஊரணிக்குள் தவறி விழுந்தவர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Update: 2024-01-23 07:39 GMT
காவல் நிலையம் 
விருதுநகர் அருகே முதலிப்பட்டி சின்னராமலிங்கபுரம் பகுதியைச் சார்ந்தவர் கருணாகரன் வயது 22. இவர் சிறு வயதிலேயே உடல்நிலை சரியில்லாமல் புத்தி சுவாதீனம் இல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கருணாகரன் அவருடைய அண்ணன் நாகராஜ் பராமரிப்பில் இருந்து வந்ததாகவும் கருணாகரனுக்கு வலிப்பு நோய் வருவதாகவும் அதற்கு மருத்துவம் பார்த்து வருவதாகவும் கடந்த 19ஆம் தேதி இரவு உணவு சாப்பிட்டுவிட்டு மாத்திரையை எடுத்துக்கொண்டு தூங்கச் செல்வதாக கருணாகரன் சென்றதாகவும் மறுநாள் காலை 5 மணி அளவில் நாகராஜ் எழுந்து கருணாகரனை பார்த்த பொழுது கருணாகரன் அங்கு இல்லை எனவும், பல்வேறு பகுதிகளில் தேடியும் கருணாகரன் கிடைக்காத அடுத்து காலை 6 மணி அளவில் ஊருக்கு அருகே உள்ள ஊரினியில் கருணாகரன் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாகவும், இயற்கை உபாதைக்கு சென்ற கருணாகரன் எதிர்பாராத விதமாக ஊரணியில் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என அவருடைய அண்ணன் நாகராஜன் இந்த புகாரின் அடிப்படையில் வச்சக்காரப்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News