ஏரியில் மீன் பிடிக்க சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

திருப்பத்தூர் அருகே மதுபோதையில் ஏரியில் மீன் பிடிக்க சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

Update: 2023-12-16 10:26 GMT

 திருப்பத்தூர் அருகே மதுபோதையில் ஏரியில் மீன் பிடிக்க சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே மது போதையில் பீம குளம் ஏரியில் மீன் பிடிக்க சென்ற நபர் ஏரியில் மூழ்கி உயிரிழப்பு!

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அடுத்த கொட்டாவூர் பகுதியை சேர்ந்த புஷ்பராஜ் மகன் குமாரன்(45) இவருக்கு கோவிந்தம்மாள் என்ற மனைவியும், இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இந்த நேற்று மனைவியிடம் மது அருந்துவதற்காக பணம் பெற்றுக்கொண்டு அருகே உள்ள பீமகுளம் ஏரிக்கரையின் மீது மது அருந்தி உள்ளார். பின்னர் ஏரியில் மீன் பிடிக்க முயன்றுள்ளார் இந்த நிலையில் அதிக மது போதையில் இருந்த குமரன் தவறி விழுந்து நீச்சல் அடிக்க முடியாமல் ஏரியில் மூழ்கி உயிரிழந்து உள்ளார்.

பின்னர் குடும்பத்தினர் பல்வேறு இடங்களிலும் தேடி வந்த நிலையில் பின்னர் அப்போது ஏரி கரையின் ஓரத்தில் செருப்பு இருந்ததை பார்த்த உறவினர்கள் போலீசாருக்கும் தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுத்தனர். பின்னர் விரைந்து தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி உடலை மீட்டனர். மேலும் பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இந்த சம்பவம் குறித்து கந்திலி போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News