போலி நகையை அடமானம் வைத்தவரை போலிசார் தேடும் பணி தீவிரம் !
போலி நகையை அடமானம் வைத்த நபரை போலிசார் தேடி வருகின்றனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-07-08 09:51 GMT
வழக்கு
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள அழகநேரி பகுதியை சேர்ந்த ராஜேஷ் (30) என்பவர் வள்ளியூரில் உள்ள தனியார் வங்கியில் 14.6 பவுன் நகையை அடமானம் வைத்து ரூ 5.22 லட்சம் பணம் வாங்கியுள்ளார். இந்த நகையை வங்கி ஊழியர்கள் சோதனை செய்த போது போலி நகை என தெரியவந்தது. இதனை அடுத்து வங்கி மேலாளர் சக்திவேல் வள்ளியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இந்த புகாரின் பேரில் வள்ளியூர் போலீசார் நேற்று வழக்கு பதிந்து ராஜேஷை தேடி வருகின்றனர்.