ரயில்வே மேலாளரை தாக்கி பணம் செல்போன் பறிப்பு !
சிலைமான் அருகே ரயில்வே மேலாளரை தாக்கி பணம் செல்போன் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-21 06:47 GMT
கைது
மதுரை மாவட்டம், சிலைமான் ரயில்வே நிலையத்தில் மேலாளராக வேலை பார்த்து வருபவர் உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஹிமாண்பு மதுகர் விமல் (29). இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மதுரை ரிங் ரோட்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது ஒரு மூன்று இளைஞர்கள் ஆட்டோவில் வந்துள்ளனர். அந்த ஆட்டோவில் மறைத்து, என்னை சிலைமான் ரயில் நிலையத்தில் இறக்கி விடுமாறு கூறியுள்ளார். அவர்களும் அவரை ஏற்றிக் கொண்டு வந்த நிலையில் ரயில்வே நிலையத்திற்கு போகாமல் மதுரை - ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் மணலூர் கிராமத்தை தாண்டி வேறொரு வழியாக சென்றுள்ளனர். சந்தேகம் அடைந்த மேலாளர் அவர்களிடம் கேட்டுள்ளார். அவர்கள் அவரிடமிருந்து செல்போன், பணத்தை அடித்தே பிடுங்கிவிட்டு நெடுஞ்சாலையில் இறக்கி விட்டு சென்றுள்ளனர். இதுதொடர்பாக திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்து நிலையில் திருப்புவனம் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட ஒரு சிறார் உட்பட மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.