பழைய இரும்புகடைக்கு தீ வைத்தவா் கைது
பழைய இரும்புகடைக்கு தீ வைத்தவரை போலீசார் கைது செய்தனர்.;
By : King 24x7 Website
Update: 2023-10-30 03:42 GMT
தீ வைத்தவர் கைது
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கடலையூா் சாலை வள்ளுவா் நகரைச் சோ்ந்த கிருஷ்ணசாமி மகன் சோலையப்பன் (53). பழைய இரும்புக் கடை வியாபாரியான இவருக்கும், உறவினரான வேலாயுதபுரம் 2ஆவது தெருவைச் சோ்ந்த முத்துக்குமாா் மகன் விஜயராஜனுக்கும் (41) இடையே தகராறு இருந்ததாம். இதனிடையே, விஜயராஜன் சோலையப்பன் கடைக்குச் சென்று அவரை அவதூறாகப் பேசி கடையிலிருந்த பொருள்களுக்கு தீ வைத்தாராம். இதுகுறித்து சோலையப்பன் அளித்த புகாரின் பேரில், கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, விஜயராஜனை கைது செய்தனா்.