கூலித் தொழிலாளிடம் நூதன முறையில் மோசடி போலீசார் விசாரணை !

விழுப்புரத்தில் கூலி தொழிலாளிடம் நூதன முறையில் மோசடி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபரை தேடிவருகின்றனர்.

Update: 2024-06-19 07:02 GMT

 சைபர் கிரைம்

விழுப்புரம், நந்தனார் தெருவைச் சேர்ந்தவர் வில்சன், 61; கூலித் தொழிலாளி. இவரது மொபைல் போனுக்கு கடந்த மார்ச் 27ம் தேதி தனியார் நிதி நிறுவனம் பெயரில், குறைந்த வட்டிக்கு கடன் தருவதாக தகவல் வந்தது.அதனை நம்பிய வில்சன், அதில் இருந்த மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டார்.அப்போது, பேசிய மர்ம நபர், ரூ.2 லட்சம் கடன் தருவதாகவும், அதற்கான பிராசசிங் கட்டணமாக ரூ.17 ஆயிரத்து 601யை 4 தவணைகளில் மர்ம நபர் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பினார்.அதன்பிறகு அந்த நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை.தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த வில்சன் அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபரை தேடிவருகின்றனர்.
Tags:    

Similar News