ஜூன் 4ம் தேதி அமைச்சர்களின் பதவி காலியாகும்: எம்எல்ஏ ராஜன் செல்லப்பா
ஜூன் 4ம் தேதி அமைச்சர்களின் பதவி காலியாகும் என தெரியும் என்று எம் எல் ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூரில் அதிமுக சார்பில் மதுரை பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் கழக செயல்வீரர்கள் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில், மதுரை வடக்கு மாவட்ட செயலாளரும், திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பா தலைமையில் நடைப்பெற்றது.
இதில், மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம் மற்றும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்து பேசிய ராஜன் செல்லப்பா.
துரையில் உள்ள அமைச்சர் தேதி மற்றும் மதுரை தொகுதியில் திமுக வேட்பாளர் தோற்றால் ராஜினாமா செய்து விடுவேன் என பேசியுள்ளார். வரும் ஜூன் நான்காம் தேதி தமிழகத்தில் எத்தனை மந்திரிகள் ராஜினாமா செய்வார்கள் என்று தெரியவரும்.
ஏனென்றால் திமுக தலைவர் ஸ்டாலின் திமுக வேட்பாளர்கள் குறைந்த வாக்குகள் பெற்றால் எழுதிய பொறுப்பாளராக உள்ள அமைச்சர்களை பொறுப்பில் இருந்து தூக்கி விடுவேன் என அறிவித்துள்ளார். திமுக மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர். மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி தமிழகத்தில் அமைய வேண்டும் என மக்கள் விரும்பி வருகின்றன.
வரும் தேர்தலில் ஒற்றை விரல் மையினால் இரட்டை இலையை வெற்றியடைய செய்ய வேண்டும். தற்போது மும்மூனைப் போற்றி என்று கூறி வருகின்றனர் ஆனால் உண்மையில் அதிமுக மற்றும் திமுகவிற்கு மட்டுமே போட்டி. திமுக ஆட்சியில் சொத்து வரி உயர்வு உள்ளிட்ட பலவற்றுக்கு விலை உயர்ந்துள்ளது. அவர்களின் திட்டத்தினால் மக்கள் வெறுப்படைந்து உள்ளனர். தமிழகத்தில் ஏற்கனவே திமுக ஆட்சி இரண்டு முறை கலைக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது திமுகவின் நிலை பரிதாபமாக உள்ளது இதனால் ஸ்டாலின் பயந்து போய் உள்ளார் இனி திமுக வெற்றி பெற முடியாது. தற்போது ராமநாதபுரத்தில் நிற்கும் ஓபிஎஸ் நிலை வருத்தம் அளிப்பதாக உள்ளது,
மிகப்பெரிய பொறுப்பில் இருந்தவர் அவர். தற்போது மதுரை பாராளுமன்ற உறுப்பினராக உள்ளவர் கீழடியில் சிவகுமார் குடும்பத்தை பாதுகாப்பதற்கும், கதை எழுதுவதற்கு மட்டுமே செயல்பட்டுக் கொண்டே இருக்கிறார். மேலூர் பகுதியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்திற்கோ மதுரையில் மாற்றுத்திறனாளிகள் நடத்திய போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
தமிழகத்தின் கலாச்சாரத்தை அளிக்கும் விதமாக அலங்காநல்லூரில் 62 கோடி மதிப்பீட்டில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் மதுரையில் 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நூலகமும் கட்டியதிலும் ஊழல் நடைபெற்று உள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மேலூர் பகுதியில் ஒரு லட்சம் திறக்கும் அதிகமான வாக்குகள் பெற்று நமது வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று அப்போது பேசினார்.
தொடர்ந்து, அதிமுக வேட்பாளர் மருத்துவர் சரவணன் பேசும் போது.. தற்போது மக்கள் மனதில் அதிமுக பல்ஸ் நல்ல நிலையில் உள்ளது திமுக பல்ஸ் வீக்காக உள்ளது. கடந்த காலங்களில் திமுகவினர் பொய்யான வாக்குறுதிகளை மக்களிடம் கொடுத்துள்ளனர் தற்போது அதே போலவே வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர்.
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான அச்சாரமே இப்போது நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தல். மதுரை நாடாளுமன்ற தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளையும் சேர்த்து 3 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று நாம் வெற்றி பெற வேண்டும்.
இங்கே இருக்கு ஒவ்வொரு தொண்டர்களும் தானே வேட்பாளர் என கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்று அப்போது பேசினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராஜன் செல்லப்பா... குறைவான வாக்குகள் பெற்றால் அமைச்சர் பதவி எடுக்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலினே கூறியுள்ளார். வரும் ஜூன் நான்காம் தேதி எத்தனை அமைச்சர்களின் பதவி காலியாகும், எத்தனை பேர் ராஜினாமா செய்வார்கள் என்றும் தெரியவரும். தர்மம் நியாயம் வெற்றி பெறும் என கூறும் ஓபிஎஸ், தன்னம்பிக்கை இருந்தால் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடட்டும்.
காந்தியை போன்று, முன்னாள் முதல்வர் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் பொதுவானவர்கள், அவர்கள் படத்தை யாரும் பயன்படுத்தலாம். அமைச்சராக உள்ள சேகர்பாபு தேர்தல் அதிகாரி அலுவலகத்திற்குள் சென்றது மாபெரும் தவறு. அமைச்சராக உள்ளவர்களுக்கு இன்னும் காவல்துறை பாதுகாப்பு உள்ளது. அதிமுக ஆட்சியின் போது அமைச்சராக இருந்த நாங்கள், தேர்தல் அலுவலகத்திற்குள் செல்வதை தவிர்த்து வந்திருக்கின்றோம். தேர்தல் அலுவலகங்களில் உள்ள அதிகாரிகள் திமுகவினரின் கட்டுப்பாட்டில் வருவதால், திமுகவினர் அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகின்றனர்.
மதிமுக, பாமகவிற்கான கட்சியின் சின்னத்தை வாங்கி கொடுத்தது அதிமுக, தற்போது நாங்கள் வாங்கிக் கொடுத்த அங்கீகாரத்தையும் சின்னத்தையும் இழந்து, அவர்கள் துன்பத்திலும் பரிதாபத்திலும் உள்ளார்கள். 38 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துள்ள திமுகவினர் மத்திய அரசுக்கு எதிராக இதுவரை போராடியது இல்லை. எப்பொழுதும் மத்திய அரசுடன் மறைமுகமாக கூட்டணி வைப்பவர்கள் திமுகவினர் தான்.
பாஜக அவர்களுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்றால் நேரடியாகவே கூட்டணி வைப்போம், யாருக்கும் அஞ்ச வேண்டியது இல்லை.. அதிமுக செல்வாக்கு மிக்க கட்சியாக வளர்ந்துள்ளதால் ஸ்டாலினால் பொறுக்க முடியாமல் பொறாமையில் காரணமாக களங்கம் கற்பிக்க முயல்கிறார். 2026 இல் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டுவரப்படும் என நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவினர் அதிக இடங்களில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் போராடி மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கண்டிப்பாக கொண்டு வரப்படும். மதுரையை தொடர்ந்து, ராமநாதபுரத்தில் பயிலும் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மாணவர்களை மதுரைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விவசாய நிறைந்த பகுதியாக உள்ள மதுரை மாவட்டத்தில் அதிமுக ஆட்சியில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. காங்கிரஸ் மற்றும் திமுகவினர் ஆட்சியின் போது மதுரையில் ஜவுளி தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அனைத்து தொழில் திட்டங்களும் தூத்துக்குடிக்கு செல்கிறது. மதுரையில், டைடில் பார்க் அறிவித்து 3 ஆண்டுகள் ஆகியும், எந்த விதமான பூர்வாங்க பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. கோயில் நகராக உள்ள மதுரையில் கலாச்சாரம் பாதுகாக்கப்பட்டு துணை தொழில் நகராக மாற்றப்படும்.
குறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திருந்த தேவகவுடா போன்றவர்கள் பிரதமராக வந்துள்ளனர். மத்தியில் உள்ள அரசையும், பிரதமரையும் அதிமுக தேர்ந்தெடுக்கும் காலம் விரைவில் வரும். அதிமுகவுக்கு பிரதமராகும் வாய்ப்பு வரும் என்று அப்போது செய்தியாளர்களிடம் தெரிவித்தார்