நாடாளுமன்றத் தேர்தல் ஒட்டி கட்சிக்கொடிகள் தயாரிப்பு பணி தீவிரம்

நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி கட்சிக்கொடிகள் தயாரித்து அனுப்பும் பணியில் தீவிரம் நடைபெற்று வருகிறது.

Update: 2024-02-21 08:38 GMT

கட்சிக்கொடிகள் தயாரிப்பு பணி தீவிரம்

நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரசியல் கட்சிகள், தேர்தல் கூட்டணி, தேர்தல் வாக்குறுதிகள் தயாரிப்பு பணி என்று பல்வேறு கோணங்களில் தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராக உள்ளது. ஈரோடு சுற்றுப்புற வட்டாரங்களை சேர்ந்த பல்வேறு பகுதிகளில் கட்சிக்கொடி தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.  நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே ஓரளவுக்கு ஆர்டர்கள் வந்து நிலையில் தேர்தல் தேதி அறிவித்து வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்டால் இரவு பகல் பாராமல் வேலைகள் வரும் என்று இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். இங்கு தயாரிக்கப்படும் கட்சிகொடிகள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
Tags:    

Similar News