தக்காளி பெட்டியின் விலை ரூ.200ல் இருந்து ரூ.300 வரை விற்பனை
திண்டுக்கல், பழநி, ஒட்டன்சத்திரம் பகுதிகளில் தக்காளியின் வரத்து அதிகரிப்பால், அதன் விலை குறைந்து விற்பனையாகிறது. எனினும் அய்யலூர் சந்தையில் தக்காளி வரத்து அதிகரித்த போதிலும் அதன் விலை சீரான நிலையிலே உள்ளது.
Update: 2024-03-20 09:00 GMT
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் தக்காளிக்கு என தனி சந்தை உள்ளது.இங்கிருந்து வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படும் தக்காளி பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது. இப்பகுதியிலுள்ள விவசாயிகள் அதிகளவு தக்காளியை பயிரிடுவதால் அய்யலூர் சந்தைக்கு தக்காளி வரத்து எப்போதும் சீராக இருக்கும். இச்சந்தையில் தினசரி 15 டன் முதல் 25 டன் தக்காளி கொள்முதல் செய்யப்படுகிறது.இந்நிலையில் திண்டுக்கல், பழநி, ஒட்டன்சத்திரம் பகுதிகளில் தக்காளியின் வரத்து அதிகரிப்பால், அதன் விலை குறைந்து விற்பனையாகிறது. எனினும் அய்யலூர் சந்தையில் தக்காளி வரத்து அதிகரித்த போதிலும் அதன் விலை சீரான நிலையிலே உள்ளது. இதனால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நேற்று இச்சந்தையில் 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டியின் விலை ரூ.200ல் இருந்து ரூ.300 வரை விற்பனை செய்யப்பட்டது.