மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
தாந்தோணி மலை ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூர் மாவட்டம் தாந்தோணி மலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் வட்டாரத் தலைவர் மகேந்திரன் தலைமையில் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வட்டார துணைத் தலைவர்கள் வினோத் குமார் விஜயலட்சுமி உள்ளிட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் தமிழ்வாணன் சிறப்புரை நிகழ்த்தினார்.
ஆர்ப்பாட்டத்தின் போது,KKI & RRH திட்டங்களுக்கு போதுமான ஊழியர் கட்டமைப்பு வசதியை ஏற்படுத்த வேண்டும். தமிழ்நாடு அரசு KKI திட்ட பயனாளிகள் தேர்வு குறித்தான திருத்திய வழிகாட்டு நெறிமுறைகளை உடனே வெளியிட வேண்டும். KKI. & RRH திட்ட பணியாளர்களின் பட்டியலை இறுதி படுத்திட உரிய கால அவகாசம் வழங்கிட வேண்டும். என்ற மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தின் நிறைவில், போராட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி கூறினார் பொருளாளர் கமலக்கண்ணி்.