சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி கிடத்தான் ஓட்டப்பந்தயம்

ராசிபுரத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி நடைபெற்ற கிடத்தான் ஓட்டப்பந்தயத்தில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Update: 2024-02-04 10:14 GMT
கிடத்தான் ஓட்டப் பந்தயத்தில் குழந்தைகளை உற்சாகப்படுத்தும் விதமாக கைகளைத் தட்டி பெற்றோர்களும் குழந்தைகளுடன் போட்டியில் கலந்து கொண்டனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் SRV இண்டர்நேஷனல் பள்ளி சார்பில், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி 2வது கிடத்தின் ஓட்டப்பந்தையம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பள்ளி மாணவ மாணவிகளுடன் பெற்றோர்களும் கலந்துகொண்டனர். ஓட்டமானது 1 கிலோ மீட்டர், 2 கிலோ மீட்டர், 3 கிலோ மீட்டர், 5 கிலோ மீட்டர் சிறுவர்களுக்கான 500 மீட்டர் என 5 பிரிவுகளின் கீழ் நடந்தது. பள்ளி அருகே இருந்து துவங்கிய கிடத்தான் ஓட்டம், பட்டணம் சாலையில் சென்று மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது. சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி நடந்த கிடத்தான் ஓட்டத்தை பள்ளியின் சேர்மன் கணேஷ்பாபு துவக்கி வைத்தார். இதில், அனைத்து பிரிவுகளிலும் 3 மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News