ஜாமீனில் வெளியே வந்த ரவுடிகள் மீண்டும் கைது

சேலம் மத்திய சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த 4 ரவுடிகள் மீண்டும் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2024-06-22 03:46 GMT

சேலம் மத்திய சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த 4 ரவுடிகள் மீண்டும் கைது செய்யப்பட்டனர்.


கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் பிரசாந்த், அமர்நாத், ராஜேஷ், பிரவீன். பிரபல ரவுடிகளான இவர்கள் 4 பேர் மீதும் கொலை, கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த ஆண்டு 4 பேரையும் கஞ்சா விற்பனை வழக்கில் கோவை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே, நேற்று மதியம் சேலம் மத்திய சிறையில் இருந்து பிரசாந்த், அமர்நாத், ராஜேஷ், பிரவீன் ஆகிய 4 பேரும் ஜாமீனில் வெளியே வந்தனர்.

Advertisement

அப்போது, அங்கு காத்திருந்த கோவை போலீசார் மற்றொரு வழக்கில் கைது செய்ய முயன்றனர். அதற்கு அவர்களது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து சிறைச்சாலை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி ஜாமீனில் வெளியே வந்த 4 ரவுடிகளையும் மீண்டும் கைது செய்து வேனில் கோவைக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் கோர்ட்டு முன்பு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News