லாரி பின்பக்க டயர்கள் கழன்று ஓடியதால் போக்குவரத்து பாதிப்பு

பாபநாசத்தில் ஜல்லி ஏற்றி சென்ற லாரி பின்பக்க டயர்கள் கழன்று ஓடியதால் தஞ்சாவூர் கும்பகோணம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Update: 2024-06-29 06:54 GMT

பாபநாசத்தில் ஜல்லி ஏற்றி சென்ற லாரி பின்பக்க டயர்கள் கழன்று ஓடியது தஞ்சாவூர் கும்பகோணம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு பெரம்பலூரில் இருந்து பட்டீஸ்வரம் நோக்கி சாலைப் பணிகளுக்காக லாரியில் ஜல்லி ஏற்றுக்கொண்டு பாபநாசம் வழியாக வந்து கொண்டிருந்தது அப்போது பாபநாசம் தெற்கு ராஜ வீதியில் லாரி வந்தபோது அங்கு சாலையில் குறுக்கே வடிகாலுக்காக புதைக்கப்பட்ட பகுதியில் மேடாக இருந்தபோது லாரி அந்த வழியாக ஏறிய போது திடீரென்று பின்பக்க டயர்கள் கழன்று ஓடியது.

இதனால் பின்னால் வந்த பொதுமக்கள் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களும் எந்தவித காயமென்று தப்பினார்கள் லாரியை ஓட்டி வந்த சோழங்கநத்தம் அணில் குமாரும் காயம் மின்றி தப்பினார் சம்பவத்தால் தஞ்சாவூர் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது தஞ்சை குடந்தை சாலை வழியாக வந்த பேருந்துகள் வாகனங்கள் போக்குவரத்து மாற்றி விடப்பட்டது இதனால் பள்ளி கல்லூரி மாணவிகள் விவசாயிகள் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள் ஆகினர் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார்கள் போக்குவரத்தை சரி செய்தனர்

Tags:    

Similar News