தமிழக -ஆந்திர சாலையில் சுமார் 2 மணி நேரமாக நீடித்த சாலை மறியல்.

கட்டுப்பாட்டை இழந்து வீட்டிற்குள் சிமெண்ட் லாரி புகுந்த விபத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் உயிழந்தார். இதனால் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-10-23 06:53 GMT

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே தமிழக ஆந்திர சாலையில் போக்குவரத்து முடக்கம் சுமார் 2 மணி நேரமாக நீடித்த சாலை மறியல். ஆந்திர மாநிலத்தில் இருந்து சிமெண்ட் மூட்டைகளை ஏற்றி வந்த 24 சக்கரம் கொண்ட கனரக லாரி வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த அனுப்பு கிராமத்தினருக்கு வந்தபோது சாலையோரம் இருந்த மரக்கிளை சாலையின் இடது பக்கம் சரிந்து இருந்ததால் வேகமாக வந்த லாரியை வலது பக்கமாக லாரி ஓட்டுநர் திருப்பியுள்ளார். அப்போது லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை அருகே இருந்த வீட்டின் உள்ளே நுழைந்ததில் வீட்டின் வெளியே அமர்ந்திருந்த எழிலன் என்ற அரசு பேருந்து ஓட்டுனர் படுகாயம் அடைந்தார். குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைக் கண்டித்து அப்பகுதி மக்கள் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது இதனால் ஆந்திர மற்றும் தமிழக இணைப்புச் சாலை போக்குவரத்து முடங்கியது சுமார் ஒரு கிலோமீட்டருக்கு மேலாக சாலையின் ஓரத்தில் வாகனங்கள் அணிவகுத்து நின்றது சாலை மறியல் ஈடுபட்டவரிடம் பேச்சுவார்த்தை செய்ய முடியாமல் காவல்துறையினர் திணறினர். பின்னர் அப்பகுதியின் அரசியல் பிரமுகர்கள் மற்றும் ஊர் பெரியவர்கள் தலையிட்டு சாலை மறியலை கைவிட பொதுமக்களை கேட்டு முடிவுக்கு கொண்டு வந்தனர். சுமார் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.


Tags:    

Similar News