கோடை வெயிலால் ரப்பர் பால் வெட்டும் பணிகள் முடக்கம் !
கோடை வெயில் காரணமாக குலசேகரம் உள்ளிட்ட பகுதிகளில் ரப்பர் பால் வெட்டும் பணிகள் முடக்கம்.
குமரியில் பிரதான தொழிலாக ரப்பர் பால் வடிக்கும் பணி நடைபெற்று வருகிறது, கடந்த டிசம்பர் மாதத்திற்கு பின்னர் இலையுதிர் காலம் தொடங்கியதை அடுத்து, தொடர்ந்து கோடை வெயில் சுட்டெரித்து வருவதால் மழை பொழியவில்லை, குறிப்பாக ரப்பர் பால் வடிக்கும் பணி கோடை காலம் நிறைவடைந்த உடன் பிப்ரவரி மாதம் மழை பொழிவதை அடுத்து, ரப்பர் மரங்களில் இலை தளிர் விட ஆரம்பிக்கும், தற்போது மழை பொழியாததால் பால்வாடிக்கும் பணி மேற்கொள்ளப்படாமல் உற்பத்தியாளர்கள் கடும் அவதிக் குள்ளாகி வருகின்றனர்.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிறைவடையும் நிலையிலும், மழை பொழியாத இருப்பதால் குலசேகரம்,பேச்சிப்பாறை, கோதையார்ரப்பர் பால் வடிக்கும் பணி தொடங்க முடியாமல் ரப்பர் விவசாயிகள் மற்றும் ரப்பர் உற்பத்தியாளர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே ரப்பர் தொழிலாளர்களுக்கு அரசு மானியம் வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.