கோவையில் பாஜகவின் வெற்றி காலத்தால் எழுதபட்ட விதி-அண்ணாமலை!

கோவையில் பாஜகவின் வெற்றி காலத்தால் எழுதபட்ட விதி என அண்ணாமலை பேசினார்.

Update: 2024-04-18 01:47 GMT

கோவையில் பாஜகவின் வெற்றி காலத்தால் எழுதபட்ட விதி என அண்ணாமலை பேசினார்.


கோவை மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை ஹோப்காலேஜ் அருகேயுள்ள பாலன் நகர் பகுதியில் இறுதிக்கட்ட பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் ”50 ஆண்டுகளுக்கு பிறகு அரசியல் வரலாறு எழுதும் போது நரேந்திர மோடி ஆட்சிக்கு முன்பு,நரேந்திர மோடி ஆட்சிக்கு பின்பு என்று தான் எழுத முடியும். 2019 ல் கொடுக்கப்பட்ட 295 வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளோம் எனவும் திமுக அளித்த ஒரு வாக்குறுதிகளைகளை கூட நிறைவேற்றவில்லை என்ற அவர் உலகத் தலைவனுக்கு எல்லாம் தலைவனாக மோடி நின்று கொண்டிருக்கிறார் என தெரிவித்தார்.மற்ற மாநிலங்களில் எந்த தங்கு தடையின்றி மோடிக்கு வாக்கு வந்து விடுகிறது ஆனால் மோடிக்கு வாக்கு வர தமிழகத்தில் பல பிம்பங்களை உடைக்க வேண்டியுள்ளது எனவும் ஜூன் 4க்கு பின்பு திராவிட அரசியலை தாண்டிய புதிய அரசியல் வர இருக்கிறது என்றார்.பாஜக தொண்டர்களும் அரசியல் தொடர்பு இல்லாத தன்னார்வலர்கள் கடுமையாக உழைத்து இருக்கிறார்கள் எனவும் எதிர்கட்சிகளை எங்கும் பார்க்க முடியவில்லை என்றவர் மின்சாரத்தை துண்டித்து 500 ரூபாய் தருகிறார்கள்.

கோவையில் 1000, 500, 250 என ஒரு சுற்றுப் பணம் தந்து விட்டார்கள் இதனை பாஜக உடைக்கும் எனவும் ஜூன் 4க்கு பிறகு கோயம்புத்தூர் பார்முலாவை உலகம் முழுவதும் பேசுவார்கள் என்றார்.எவ்வளவு பணம் கொட்டினாலும் நீதியின் பக்கம் கோவை மக்கள் இருப்பார்கள் என்ற அவர் மாற்றான் தாய் மனப்பான்மையுடன் தான் திமுக கோவையை பார்த்து கொண்டிருக்கிறது எனவும் 33 மாதங்களாக முதல்வர், அமைச்சர்கள் வேலை செய்யவில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினருக்கு ஓட்டு போட்டால் வேலை செய்கிறோம் என தேர்தல் அறிக்கை வெளியிட்டு இருப்பது வெட்கக்கேடானது என்றார். 100 வாக்குறுதிகளை மத்திய அரசிடம் இருந்து பெற்று 500 நாட்களில் நிறைவேற்றுவோம் என்றவர் இண்டி கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என இதுவரை சொல்லவில்லை எனவும் 2004ல் ராஜ்யசபாவில் இருந்த மன்மோகன் சிங்கை பிரதமராக்கியது உலக வரலாற்றில் மோசமான ஐந்து பிழைகளில் ஒன்று எனவும் அதன் பிறகு காங்கிரஸ் ஆட்சியில் 12 இலட்சம் கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது என்றார்.வயநாட்டில் ராகுல்காந்தியை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி பக்கத்து பக்கத்து மாநிலங்களில் கூட ஒன்றாக இல்லாத இவர்கள் எப்படி நாட்டை ஆள முடியும்? எந்த தைரியத்தில் மக்களை பார்த்து ஓட்டு போடுங்கள் என கேட்கிறார்கள்? என கேள்வி எழுப்பினார்.கட்சியை தாண்டி ஓட்டு போட வேண்டிய தேர்தல் இது எனவும் கட்சி,மதம்,சாதி எதுவும் தேவையில்லை மோடியை பார்த்து ஓட்டு போடப்பட வேண்டிய தேர்தல் மோடிக்கு நிகர் மோடி மட்டும அவருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்த முடியாது எனவும் இரண்டாம் கட்ட தேர்தலுக்கு பிறகு இண்டி கூட்டணியே இருக்காது என்றார்.ஐந்து ஆண்டுகளாக இருந்த கம்யூனிஸ்ட் எம்.பி. எந்த வேலையும் செய்யாமல் வளர்ச்சியை எல்லாம் தடுத்துள்ளார் எனவும் இங்கு 15 நாட்களுக்கு ஒருமுறை தான் தண்ணீர் வருகிறது,சாலைகள் எல்லாம் குழிகளாக உள்ளது ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு பிரதமர் மோடி பணம் கொடுத்தும் கோவை ஸ்மார்ட் ஆகவில்லை என்றார்.செந்தில் பாலாஜி கைதான பிறகு மேயர் ஆவணங்களை கொளுத்திக் கொண்டிருந்தார் எனவும் கோவையில் முழுமையாக அரசு இயந்திரம் செயலிழந்து உள்ளது என்றவர் இந்த நகரத்தை மறுகட்டமைப்பு செய்ய வேண்டியுள்ளது எனவும் கோவையில் எங்கு திரும்பி பார்த்தாலும் கஞ்சா,அபின், போதை வஸ்துகள் இருக்கிறது மத்திய அரசின் போதைப்பொருள் தடுப்பு பிரிவு,தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்தை கோவைக்கு கொண்டு வருவோம்.கோவை குண்டு வெடிப்பு சம்பவம் நடந்து 26 ஆண்டுகள் கழித்தும் கோவை மீளவில்லை எனவும் தீபாவாளிக்கு முன்பு நடந்த தீவிரவாத தாக்குதலை முதலமைச்சர் சிலிண்டர் வெடிப்பு என்கிறார்.அடுத்த தாக்குதல் எப்போது நடக்கும் எனத் தெரியாது? கோவையை காப்பது பாராளுமன்ற உறுப்பினரின் கடமை என்றவர் கோவைக்கு என்.ஐ.ஏ. அலுவலகம் வருவது உறுதி எனவும் தேசத்திற்கு எதிராக சதி செய்பவர்களை உள்ளே போட வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் யார் பிரதமராக வர வேண்டும் என்பதை முடிவு செய்யும் தேர்தல்.பிரதமராக மோடி தான் வருவார் என மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். திமுக,அதிமுக இவ்வளவு பணம் கொடுக்கிறது என்பதை பற்றி எங்களுக்கு கவலையில்லை. கோவையில் 60 சதவீத வாக்குகளை தேசிய ஜனநாயக கூட்டணி வாங்கும். பிரச்சனைகளுக்கு தீர்வு கான நாங்கள் இருக்கிறோம்.மற்ற இரண்டு கட்சிகளும் பிரச்சனையை உருவாக்க நின்று கொண்டிருக்கிறார்கள். டிஆர்பி ராஜா ஆட்டை பிரியாணி போட்டு விடுவோம் என தரம் தாழ்ந்து பேசுகிறார்.இது தான் திமுகவின் வழக்கு மொழி.கோவையில் பாஜகவின் வெற்றி என்பது காலத்தால் எழுதப்பட்ட விதி.கட்சியை பார்த்து ஓட்டு போடாமல், குழந்தைகளின் எதிர்காலத்தை பார்த்து ஓட்டு போட வேண்டும். 25 ஆண்டுகளுக்கு பிறகு கோவை இந்தியாவின் முதன்மை நகரமாக இருக்க வேண்டும்.அதை பாஜகவால் தான் செய்ய முடியும். அண்ணாமலையை பாராளுமன்ற உறுப்பினராக கொண்டு வந்தால் மாற்றம் நடக்கும். 2026ல் திராவிடம் இல்லாத ஆட்சி வர கோவை அடித்தளமிட போகிறது. திராவிட அரசியலுக்கு தமிழகத்தில் வேலை இல்லை” எனத் தெரிவித்தார்.

Tags:    

Similar News