செய்யாறில் பனை நுங்கு விற்பனை அமோகம்

செய்யாறு பகுதிகளில் பனை நுங்கு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது

Update: 2024-05-14 09:44 GMT
களைகட்டிய நுங்கு வியாபாரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது, 100 டிகிரியை தாண்டி கோடை வெயில் கொளுத்துகிறது. இதனால், பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். 

  கோடை வெப்பத்திலிருந்து தற்காத்து கொள்வதற்காக குளிர்ச்சியான மற்றும் நீர்ச்சத்து நிறைந்த உணவுப் பொருள்களை அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். செய்யாறு பகுதிகளில் பனை நுங்கு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News