சங்ககிரியில் மரக்கன்றுகள் நடும்பனி பசுமை அமைப்பினர் அசத்தல்
சேலம் மாவட்டம் சங்ககிரியில் பசுமை சங்ககிரி அமைப்பின் சார்பில் பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு வைத்து அதனை பராமரித்து வருகின்றனர்.
Update: 2024-02-06 08:26 GMT
சேலம் மாவட்டம் சங்ககிரியில் பசுமை சங்ககிரி அமைப்பின் சார்பில் சங்ககிரி சாலையோரம் மற்றும் அரசு பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு வைத்து அதனை பராமரித்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து முனியப்பன்பாளையம் பகுதியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் பசுமை அமைப்பின் தலைவர் மரம் பழனிச்சாமி தலைமையில் பல்வேறு வகையான மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். அப்போது நிர்வாகி சீனிவாசன் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் உடனிந்தனர்.