சிறுத்தை தேடும் பணி மும்முரம்

தஞ்சாவூர் வனக்கோட்டத்தின் கும்பகோணம் சரகம் மற்றும் திருவாரூர் வனக்கோட்டத்தின் திருவாரூர் வனப் பணியாளர்கள் சிறுத்தை தேடும் பணியில் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.

Update: 2024-04-10 10:23 GMT

தஞ்சாவூர் வனக்கோட்டத்தின் கும்பகோணம் சரகம் மற்றும் திருவாரூர் வனக்கோட்டத்தின் திருவாரூர் வனப் பணியாளர்கள் சிறுத்தை தேடும் பணியில் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.


மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் தொடர்பாக தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் வனத்துறையை சேர்ந்த வனத்துறை ஊழியர்கள் ஏற்கனவே உள்ள களக்குழுவுடன் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளதாக நாகப்பட்டினம் வன உயிரின காப்பாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். மேலும் நண்டலாறு மற்றும் வீரசோழன் ஆற்றின் முக்கிய பகுதிகளில் கூண்டுகள் வைக்கப்பட்டு வருவதாகவும் , சிற்றோடைகளின் சந்திப்பு பகுதிகளில் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. குத்தாலம் அருகே காஞ்சிவாய், கருப்பூர் பகுதிகளிலும் மற்றும் அதனை தாண்டி தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பகுதியிலுள்ள S.புதூர், நண்டலாறு, நாட்டாறு ஆற்று பகுதிகளிலும் கண்காணிப்பு மற்றும் தேடுதல் பணிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. தஞ்சாவூர் மாவட்ட எல்லைக்குள் நண்டலாற்றில், இரண்டு கூண்டுகளும், ஆறு தானியங்கி கேமராக்களும் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் வனக்கோட்டத்தின் கும்பகோணம் சரகம் மற்றும் திருவாரூர் வனக்கோட்டத்தின் திருவாரூர் சரகத்தை சேர்ந்த வனப்பணியாளர்களும் சிறுத்தையை கண்காணிக்கும் பணியில் தற்போது இணைக்கப்பட்டு, அவர்களது சரகப்பகுதியில், தகவல் சேகரிக்கும் பணிகளும், அப்பகுதி கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளும் மேற்கொண்டு வருகின்றனர். அதேநேரத்தில் ஏற்கனவே சிறுத்தை நடமாட்டம் இருந்த காவேரியாற்று பகுதிகளிலும் தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் சிறுத்தை நடமாட்டம் இருந்த பகுதிகள் மற்றும் சிறுத்தை நடமாட்டம் இருக்க சாத்தியமுள்ள பகுதிகளிலும் தானியங்கி கேமராக்கள் பொறுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News