குட்கா பொருட்கள் விற்ற கடைக்கு சீல்
கொட்டகுடியில் அத்துமீறி புகையிலை மற்றும் குட்கா விற்பனை செய்த கடையை பூட்டி, சீல் வைக்கப்பட்டது.
Update: 2023-12-23 03:26 GMT
சிவகங்கை மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் இதுவரை 42 கடைகளை உணவுத்துறை அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் தற்காலிகமாக மூடி கடைகளுக்கு சீல் வைத்து கடையின் உரிமத்தை ரத்து செய்துள்ளனர். இந்நிலையில் சிவகங்கை அருகே உள்ள பகத்சிங் ரோடு, கொட்டகுடியில் அத்துமீறி புகையிலை மற்றும் குட்கா விற்பனை செய்த கடையை பூட்டி, சீல் வைக்கப்பட்டது.