தென் மாவட்டத்திற்கு கோடை கால சிறப்பு இரயில்
தென் மாவட்டத்திற்கு கோடை கால சிறப்பு இரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கோடை விடுமுறை கூட்ட நெரிசலை சமாளிக்க திருநெல்வேலி-பெங்களூர் எலகங்கா இடையே ஒரு வாராந்திர சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.அதன்படி திருநெல்வேலி-எலகங்கா சிறப்பு ரயில் (06045)திருநெல்வேலியில் இருந்து மே 22, 29,ஜூன் 5,12 ஆகிய புதன்கிழமைகளில் மாலை 03.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 03.15 மணிக்கு எலகங்கா சென்று சேரும்,மறு மார்க்கத்தில் எலகங்கா-திருநெல்வேலி சிறப்பு ரயில் (06046)திருநெல்வேலியில் இருந்து மே 23,30,ஜூன் 6,13 ஆகிய வியாழக்கிழமைகளில் அதிகாலை 05.00 மணிக்கு புறப்பட்டு மாலை 06.45 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும். இந்த எலகங்கா-திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் பகல் நேர எக்ஸ்பிரஸ் ரயில் ஆக இயக்கப்படுகிறது.
இந்த சிறப்பு ரயில்கள் கோவில்பட்டி,சாத்தூர் விருதுநகர்,மதுரை,திண்டுக்கல், கரூர்,நாமக்கல்,சேலம், திருப்பத்தூர், பங்காரப்பேட் கிருஷ்ணராஜபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 2 மற்றும் 3 படுக்கை கொண்ட குளிர்சாதன படுக்கை வசதி பெட்டிகள்,10 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள்,3 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள்,2 இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்படும். இந்த ரயில்களுக்கான பயண சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.