முற்றுகையிட்ட ஆசிரியர்கள் சங்கத்தினர் கைது

விழுப்புரத்தில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி முற்றுகையிட்ட 169 இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-02-28 11:07 GMT

விழுப்புரத்தில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி முற்றுகையிட்ட 169 இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை கலைய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 19ஆம் தேதி முதல் சென்னையில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாவட்ட தலைநகரங்களில் போராட்டமும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று கோரிக்கை வலியுறுத்தி முற்றுகையை போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்ட இடைநிலை பதிவு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று பிற்பகல் 11:30 மணிக்கு முற்றுகை போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ராஜகுமாரி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜோஸ், பொருளாளர் பாலராமணி, துணை செயலாளர் சசிதரன் உள்ளிட்டவர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்

. இதனை அடுத்து கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட உள்ளே செல்ல முயன்ற இடைநிலை ஆசிரியர்கள் 119 பெண்கள் உள்ளிட்ட 169 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் சிறை வைத்தனர்.

Tags:    

Similar News